இருட்டு உலகம்

இருட்டு உலகம் இது திருட்டு உலகம்
ஒருவர் உடமையை ஒருவர் திருடும்
பகட்டு உலகம்
இது பகைமை உலகம் ...........

நல்லவர்போல் நடித்து நகைப்புகள் காட்டி
தீமைகள் செய்யும் மனிதரும் உண்டு
உள்ள வஞ்சனை மனதில் மறைத்து
மறைமுகமாய் கொல்லும் மனிதரும் உண்டு ...........

உதவி கேட்டு உன்கால் பிடிப்பார்
முடிந்த பின்பு நன்றியை மறப்பார்
வாழ்வில் ஏற்றம் கொடுக்க ஆளே இல்லை
காலை இழுத்து விடுவதற்கு இங்கு ஆளுண்டு ..........

விழித்துக்கொண்டிருக்கும்போதே விழியை திருடும்
திருட்டு உலகம் இந்த உலகம்
உறங்கும் வேளையில் சொல்லவா வேண்டும்
நிகழ்வுகளை கொஞ்சம் நினைத்துப்பார் ............

அபகரிப்புகள் இங்கு அன்றாட நிகழ்வு
அதையும் எதிர்க்க ஆளையும் கொல்லும்
நிதர்சன உலகம் இதுதான் தம்பி
நீயும் கொஞ்சம் விழிப்புடன் இரு ..............

பொதுநலம் கொண்டவர்கள் மண்ணில் குறைவு
சுயநலம் கொண்ட மனிதர்கள் மத்தியில்
தன்னலமே பேணும் இந்த உலகத்தில்
உண்ணலாம் காக்க எவரும் இல்லை ...........

விழிப்புடன் இரு விவேகத்துடன் இரு
உன்னையே நம்பி உறுதியோடு போராடு
மற்றவரை நம்பி கண்ணயர்ந்தால்
உன் உடல்உறுப்புகளும் கூட திருட்டு போகும்

இருட்டு உலகம் இது திருட்டு உலகம்
விழிப்புடன் இருந்தாலே வெல்லும் உலகம்
உண்மையை உணர்ந்து செயல்பாடு நீயும்
வெளிச்சம் கண்டிட விரைந்திடு நீயும் ..........

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Jul-13, 8:51 am)
பார்வை : 168

மேலே