நீ வேண்டும் இறைவா

இறைவா !
வாழும் நாள் வரை நீ வேண்டும் இறைவா !

விசாலமான இதயத்தைக் கொடு
என்னில் அதிகமான ரணமான
கடல் நீரைத் தாங்கும் பாறைபோல
வேதனைகளையும் அவமானங்களையும்
தாங்கிக்கொண்டு ஏற்றுக் கொள்ளும்
இதயம் வேண்டும் இன்று முதல்
வாழும் நாள் வரை ....!

சோகங்கள் சுமைகளோடும்
வலம் வரும் வறியவர்களை
கண்களின் இமை போல
ஏற்றுக் கொள்ளும் இதயம் வேண்டும்
வாழும் நாள் வரை ....!

தனிமையிலும் நோயிலும்
நம்பிக்கை எல்லையைக் கடந்து
சருகாகி சாகக் கிடக்கும்
மானிடர்கள் எவரையும்
ஏற்றுக் கொள்ளும் இதயம் வேண்டும்
வாழும் நாள் வரை ...!

விழியோரம் சிந்தும் கண்ணீர்
காயங்கள் இழந்து சோர்ந்து
வாழும் மனித இனங்களைத்
தேடி ஏற்றுக் கொள்ளும் இதயம் வேண்டும்
வாழும் நாள் வரை ...!

என் சிறு உலகில்
சுகமாய் துயரின்றி
நம்பிக்கையோடும் துணிவோடும்
அன்பு கலந்தே உதவவேண்டும்
உன்னைப் போல் நானும்
ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும்
இன்றும் நாளையும் எம்
வாழும் நாள் உள்ள வரை ...!

எனக்கு அது போதும் இறைவா !
என் வாழும் நாள் ஆயுள் உள்ள வரை...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (3-Jul-13, 10:53 am)
பார்வை : 167

மேலே