ஏழை
எல்லை எதுவென்றே அறியாமல்
இறகாய் அலைந்து திரிகிறேன்
வலி என்ற ஒன்று மட்டும் எனக்கு
வழிகளாய் வந்து செல்கிறது
வழி எங்கும் உழைப்பால் அலைந்து திரிகிறேன்
மிஞ்சுகிறது உயிர் மட்டும் தானே !
உயிருக்காக போராடுகிறேன் .ஆனால்
வாழ்வதற்கு காரணங்கள் இல்லை .
இருப்பினும் என் கண்ணீரெல்லாம்
சுடர் விளக்காய் எரிகின்றது
பணக்காரன் என்னும் நண்பன் வீட்டிலே
நான் மட்டும் இன்றும் வறுமை எனும் பெருமலையை
தகர்த்தெறியும் சிற்றுளியாய் தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ????