குடிமகன் வாழ்கை தத்துவம்
மதுவால்,மதி இழந்து,மானமிழந்து பல வாடகை வீடுகளுக்கு குடிபெயர்ந்து,இறுதியில் வாடகை வீட்டில் குடிப்பவனுக்கு,குடியிருக்க வீடில்லாமல்! வாடகை கொடுக்க வழியில்லாமல்! இறுதியில் மனமுடைந்து போதையின் சூதால் அனாதையாக தெருவில் ஏற்படும் விபத்து மற்றும் கால்வாய்களில் விழுந்து மதுவின் மயக்கத்தில் குடிமகனே நீ இறந்த பிறகு ஏற்படும், இன்னல்களை நினைத்து பார்! பொட்டிழந்த மனைவி, பிள்ளைகள் படிக்க முடியாமல், இருக்க இடம் இல்லாமல், உடுக்க உடை இல்லாமல், திருடர்களாகவும்,வன்முறையாளர்களாகவும், வழி தவறிய பிள்ளைகளாகவும் மாறிக்கொண்டிருக்கும் நிலையை மாற்ற மது அடிமைகளாக மாறுவதை நாமே நிறுத்தவேண்டும்......