இனியொரு இளவரசன்

வெட்கி சுருங்கி உன் உடம்பு ஒரு புழுவை போல நெளிகிறது. மிகவும் அருவருப்பாக உணருகிறேன் இந்த சமூகத்தோடு இணைந்து வாழ. இதற்க்கு முன் இத்தனை கேவலமாக இத்தனை இழிவாக நான் உணர்ந்ததில்லை. கொட்டும் கண்ணீரும் கொதிக்கும் கோபமும் கலந்து ஒரு வகை கழிவிரக்கம் எனக்குள். என் இடது மார்பில் சகித்து கொள்ள முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
தண்டவாளத்தின் ஓரம் தனியாக கிடக்கிறது என் மனசாட்சி. பிணமாக இங்மங்கும் சுற்றி வருகிறேன் நான்.

வாழ்வையும் நீதியையும் இந்த சமூகம் வழங்குமென்று காத்திருந்து இறுதியில் மிக மோசமான ஏமாற்றத்தை எதிர் கொண்ட ஒரு உயிரை கோராமாக கொலை செய்திருக்கிறோம்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட போது பெரும் வெறி கொண்டு எழ வேண்டிய நாம் வெறும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். வாழையடி வாழையாக வரலாற்றில் நாம் காப்பாற்றி வந்த சகோதரத்துவம் காயடிக்கபட்டிருக்கிறது.

எனக்கும் தெரியும் இதை உணர்வோடு படிக்கும் உமக்கும் தெரியும் இந்த பதிவு ஒரு மயிருக்கும் உதவாதென்று.
இந்த சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் களமிறங்க வேண்டும்...

மாந்த நேயத்திற்கு எதிராக செயல்படும் சாதி அமைப்புகளை சாதி கட்சிகளை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி....

இளவரசனின் மரணத்திற்கு காரணமான கொலைகார கும்பலை கைது செய்து நீதி முன் நிறுத்தி தகுந்த தண்டனையை வழங்க வலியுறுத்தி...

சாதி மறுப்பு திருமணத்திற்கு, காதல் திருமணத்த்திற்கு பாதுகாப்பு, சலுகைகள் வழங்கி ஊக்கபடுத்த வலியுறுத்தி....

அரசால் இதை செய்ய முடியாதென்றால்
உடனடியாக இந்த மண்ணில்
ஓரின சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டுமமென்று வலியுறுத்தி......

கட்டியமைப்போம் ஒரு போராட்டத்தை

வாருங்கள் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் சமூக பொறுப்புள்ள பொது மக்களாக ஒரு அறவழி போராட்டத்தை முன்னெடுப்போம்.

என்னோடு போராட்டத்தில் நீங்கள் இணைந்து கொண்டாலும் சரி,
இல்லை
உங்கள் போராட்டத்தில் என்னை நீங்கள் இணைந்து கொண்டாலும் சரி ....
நான் தயார்...
மதுரையில் மாணவர்கள் தயார்...
இலக்கு ஒன்றுதான்.
இனியொரு இளவரசன் மனமுடைந்து மடிவதை என்னால் சகித்து கொள்ள முடியாது...

மன்னித்துவிடு இளவரசா உன் மரணத்திற்கு
நானும் ஒரு காரணம்.

தமிழ்தாசன்
05.07.2013

நீதி காண விரும்புவோர்
சாதி ஒழிக்க நினைப்போர்
அழைக்கலாம் என்னை
9543663443

எழுதியவர் : தமிழ்தாசன் (5-Jul-13, 3:59 pm)
பார்வை : 159

சிறந்த கட்டுரைகள்

மேலே