இனி தற்கொலை வேணாமுங்க
உன்னை கொல்ல
உனக்கு உரிமை உண்டா....?
எவன் தந்தது
உன் உடம்பை உனக்கு சொத்தா....?
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
உன்னை படைத்த
ஆண்டவன் கையிலே
உந்தன் முடிவு
அதை அறிந்தவன் உனக்கு
ஏன் இந்த புளப்பு...?
போதையில் நீயும்
பேதளித்து போகிறாய்
மனிதப்பெருமை அறியாது
உன்னை நீயே
பொய்ப்பித்து கொள்கிறாய்
சோதனைகள் எப்போதும்
உனக்கே சொந்தமில்லை
ராட்டினம் எப்போதும்
ஒரு புள்ளியில் நிலைத்திருப்பதில்லை ....
சோதனை கண்டு
நீயும் சோந்துவிடாதே
மரணமே முடிவென்று
உன்னை நீ மாய்த்துவிடாதே
ஆறறிவு இருந்தும் நீ
ஐந்தறிவை பாரு
அவை தற்கொலை செய்தனவா
என்று சரித்திரம் கேளு
உண்மையை அறிந்து
நீயும் வாழு ......