அன்பிற்குரியவர் மு ரா (ராமச்சந்திரன் )

எழுத்துலகமே எனதுலகமே
எழுத்து நண்பர்களே என்னுயிர் தோழர்களே
இதோ ஓர் இனிய செய்தி
திரு மு ரா அவர்களை பற்றி ...........

என் மதிப்பிற்கு உரியவர்
என் மனத்தால் கவர்ந்தவர்
எனக்கு ஊக்கம் தந்து
எழுத்துலகில் வளர்த்தவர் ..........

சிறந்த மனிதர்
எழுத்துலக நண்பர்
எனது வழிகாட்டி
என் விழிகாட்டியும் ..........

என் படைப்புகளுக்கு எல்லாம்
புத்துயிர் கொடுத்தவர்
புகழ்ச்சி தந்தவர்
என் போற்றுதலுக்கு உரியவர் ..........

முதல் கருத்தளித்து
முதன்மையாய் திகழ்பவர்
எனது கவிகளுக்கு
ஏற்றம் தந்தவர் .............

என் வெற்றிக்கு பின்னால்
அவரது ஊக்கம்
நான் பெற்ற பேர்கள்
அவருக்கே சமர்ப்பணம் ..........

என்னிலை போயினும்
அவரை மறவேன்
மனத்தால் நினைத்து
நன்றிகள் செய்வேன் ............

எழுதியவர் : வினாயகமுருகன் (5-Jul-13, 4:54 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 133

மேலே