ஒழுக்கம் அது என்ன விலை?

மனிதநேயம் மறைந்துவிட்ட உலகு
மனம் போனபோக்கில் வாழும் மானுடர்
அடுத்தவற்றில் இருந்து அடையாளப்படுதும்
பகுத்தறிவு கூட‌ பயனற்ற ஒன்று-இதில்
எழுத்தறிவு மட்டும் எந்த மூலைக்கு

ஐந்தறிவு ஜீவனுக்கும் உங்களுக்கும்
அப்படியொரு ஒற்றுமை
நெறிமுறை இல்லாத வாழ்க்கைதேடலில்
திகட்டாத தேனமுதோ- சேச்சே
குமட்டாத குறையல்லவோ

எதற்குமே விலைபேசும் மனிதா- உன்
ஒழுக்கமது என்ன விலையப்பா?
கோடி கொட்டி கொடுத்துபார்- அபோதும்
உன்னால் வாங்கமுடியாது-ஏன்
அது என்றோ நீ இழந்துவிட்ட ஒன்று

நல்லவேளை
இல்லை வள்ளுவன் உயிரோடு
இருந்திருந்தால் குறளோடு சேர்த்து
தனக்கும் மூட்டியிருப்பான் தீ
நீ மகாத்மாவாக மாறவேண்டாம்
மனிதனாக வாழக்கற்றுக்கொள்

நிலாப்பெண்

எழுதியவர் : nilaappen (6-Jul-13, 3:38 am)
சேர்த்தது : nilaapen
பார்வை : 101

மேலே