மனிதனாக வணங்கிடனும் மண்ணை!
கண்ணனுக்கு பிடித்தது வெண்ணை!
எங்களுக்கும் பிடிக்குமே உன்னை!
மன்னனாக தொட்டிடனும் விண்ணை!
மனிதனாக வணங்கிடனும் மண்ணை!
வாழும்வரை வாழ்க்கையொரு ஓட்டம்!
வசதிவந்தால் கூடிவிடும் கூட்டம்!
வாழ வேண்டும் மனம்முழுதும் நாட்டம்!
வரம்கொடுத்து போக்கிடணும் வாட்டம்!
வாழ்க்கையொரு பாலைவன பயணம்!
வழிமுழுதும் தோன்றும்பல சலனம்!
வண்ணமான எண்ணங்களை தரணும்!
வாசமாக மனமுழுதும் வரணும்!
நனமையது இறைவனவன் பாட்டு!
தீமைக்கு போடாதே நீ ஓட்டு!
நன்மனத்தால் அனைவரையும் கூட்டு!
கண்ணா அப்போதான் தின்னலாம் நீ லட்டு!!!

