@@@எழுத்து நிறுவனர் திரு.ராஜேஷ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து @@@
(நாளை 09.07.13 பிறந்த நாள் காணும் நம் எழுத்து தள நிறுவனர் திரு .ராஜேஷ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து நம் எழுத்து தளம் சார்பாக )
எழுத்தை எங்களுக்கு தந்து
எங்கள் எழுத்துக்கு எழுச்சி தந்தாய்
சுற்றித்திரிந்த பறவைகளை ஒன்றாக்கி
சுதந்திரத்துடன் சுகமான இருப்பிடம் தந்தாய்
ஆண்மகனானாலும் அன்பில் அரவணைத்து
அனைவருக்கும் எழுத்தில் அன்னையானாய்
எண்ணத்தில் எழுச்சி கொண்டீர்
எப்போதும் வாழ்வில் இன்பம் காண்பீர்
இளமையில் இனிய சிந்தனை கொண்டீர்
இனி வரும் காலத்தில் பல சாதனை செய்வீர்
அன்பான மனைவி அழகான இரு குழந்தைகள்
அறிவுமிக்க மென்பொருள் ஆய்வாளர்களுடன்
அரங்கேறும் அழகிய அலுவலகம்
அத்துனையும் என்றும் வாழும் பலகாலம்
உங்களின் எளிமைக்கு முன்பு ஏழுலகும்
உணர்ந்திடும் சிற்சிறு கடுகென்று
இளைய வயதில் பெரிய சாதனை
இனியும் வளரும் அரிய சாதனை
தமிழில் இளவயதில் கொள்ளும் ஆர்வம்
தன் மனம் பொங்க தமிழும் பெருமை கொள்ளும்
இணையற்ற மகிழ்ச்சி பலகொண்டு
இனிய வாழ்வில் முன்னேற்றம் பலகண்டு
இந்த உலகில் சாதனையாளனாக நீங்கள் திகழ
இனிய எழுத்து தளம் சார்பாக
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
(வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்தும் மனம் கொண்டு இந்த சின்னஞ்சிறியவளின் வாழ்த்தில் பிழை இருந்தால் பொறுத்தருள்க .)
...கவியாழினிசரண்யா ...