என் தேவதையின் சிரிப்பு
செவ்விதழ் சிப்பி திறந்த அவள்
சிரிப்பு - உலகம் கண்டிடாத
அழகினொரு கலைவரிசை. . . . . . . !
தேவதையவள் ஒற்றை சிரிப்பினில் கண்டேன்
நிலவொளியைத் திருடிவந்த ஓராயிரம்
முத்துக்களின் அணிவரிசை. . . . . . . . !
விஞ்ஞானம் விளங்காமல் வியந்து நிற்கும்
சரித்திரம் பார்த்திராத அதிசயங்களுள்
இதுவொரு தனிவரிசை. . . . . . . . . . . . . !
மண்ணுலக அணுவிலிருந்து விண்ணுலகச் சூரியனென, கோடி
அற்புதங்களும் இயற்கையின்
படைப்பில் ஒருவரிசை. . . . . . . . . . . . . . . !
இவையனைத்தும் விடைகொள்ளச் செய்தது
இயற்கையே - என்னவள் சிரிப்பில் நீ
மேற்கொண்ட கைவரிசை. . . . . . . . . . . . . !