என் அன்பிற்கினியவளே...!
என் அன்பிற்கினியவளே...!
உன் அன்பிற்கு அடிமையாகிவிட்டேன்.
ஏனோ தெரியவில்லை,
நானை நானும் இல்லை.
சில நாட்களாய் தனிமையின் நெருங்கிய
தோழன் ஆனேன்.
ஓர் இனம் புரியாத மாற்றம் என்னுள் கண்டேன்,
காரணம் தேடி பார்த்தேன்.
விடையாய் நீ...!
உன் கண்களின் ஒவ்வொரு பார்வையும் என்
இதயத்தை இரக்கமின்றி கொய்கிறது.
உன்னுடன் இருக்கும் வேளையில்,
தாய்மடியில் உறங்கும் குழந்தையை போல...!
உன்னை விட்டு பிரிகையில் தாயின்,
அன்பிற்காக ஏங்கும் குழந்தையை போல!
நீச்சல் தெரியாமல் உன் அன்பினில்
மூழ்கிப்போகிறேன்!
மற்றவர்களிடம் நான் பேசும் மொழி
மௌனம் என்றானது.
உயிரை உறையவைக்கும் பார்வையை
இறைவன் உனக்கு மட்டும் ஏன் தந்தான்?
உன்னுடன் பிசா வரும் வேளையில்
உறைந்து போகிறது எந்தன் உயிரும்!
நீ செல்லும் வழியில் நானும் பயணம் செய்கிறேன்,
என்றாவது ஓர் நாள் உன்னை சேர்வேன் என்ற
நம்பிக்கையில்!
உன்னுடன் பேச முடியாத நாட்களில் நான்
ஓர் ஊமையை போல் உணர்கின்றேன்
எந்தன் நினைவுகள் என்னை அறியாமல்
உந்தன் நிழலாய் உன்னை பின் தொடர்வதும் ஏனோ?
உன்னை காண வரும் ஒவ்வொரு முறையும்
என் உயிர் உற்சாகம் கொள்கிறது!
காரணமின்றி போகும் உயிரை உனக்கென
விடுவது எனக்கு கிடைத்த வரமடி..!
நேற்றோ,நீ யாரோ தானடி,
இன்றோ என் தோழி நீயடி,
நாளை என் துணையாய் வருவாயா?
உன் வார்த்தைக்காக
காத்திருப்பேன்,
ஏழு ஜென்மத்திலும்...!