நீ மட்டுமே!
சிலர் எனக்கு
அறிவுரை செய்தனர்
சிலர் என்னை
சோதித்தனர்
சிலர் என்மீது
போலியாய் அன்பு செலுத்தினர்
சிலர் என்மூலம்
காரியம் சாதித்தனர்
சிலர் எனக்கு
பாடம் கற்பித்தனர்
சிலர் எனக்கு
உலகை காட்சிப்படுத்தினர்...
இத்தனை அனுபவத்திலும்
நான் கலங்கியிருந்தபோது
எனக்காக
உன்னை
பகிர்ந்துகொண்டவன்
நீ மட்டுமே!

