வெண் மலர் பூட்டி எய்து விட்டாள் என் மனம் தேடிக் கொய்து விட்டாள்

கவண் வில் புறப்பட்ட கல்
அவள் விழி வெளிப்பட்ட சொல்
பார்த்த நாள் முதல் அதன்
குறியாய் என் மனம் .....

கல் தாக்கிக்
காயமுறுவது
இயல்பு
இந்தக் கல் தாக்கிக்
கனிந்தது பாவி என்
மனது.........

காதலைக்
காதலிக்கும் பாக்கியம்
கடவுள்
கனிந்த என்
கரும்பாறை மனதுக்கு
கருணை கொண்டு
அளித்தான் கவியூற்றி
வறண்ட இதயம்
நனைத்தான் உனைக் காட்டி.....

என் மனக் கோலம் கண்டு
மன்மதன் எனும் வண்டு
அவள் மனம் தேடிச் சென்று
அழகாகப் பொழிந்தான்
காதல்த் தேன் கற்கண்டு .....

தேன் குடித்த மனம்- நாளும்
தனை நினைத்து
உளம் வருத்தும்
ஏழை என்
கோலம் கண்டு
பொன் கவணில்
வெண் மலர் பூட்டி
எய்து விட்டாள்
என் மனம் தேடிக்
கொய்து விட்டாள்....

வெண் மலர் தாக்கிய
அந்நாள் முதல் நான்
தேன் குடிக்கும் வண்டானேன் அவள்
தேன் வடிக்கும் பூச்செண்டாளானால்....

எழுதியவர் : நஞ்சப்பன் (9-Jul-13, 7:57 am)
பார்வை : 118

மேலே