புகைப்படமாய் நான்...!!!
இன்றாவது வருவான் என்று ஏக்கத்துடன்
வாசலின் அருகில் காத்து நிற்கும் அவளிடம்(என் தாய்) நான் அப்படி கூருவேன் இனி ஒருபோதும் வர மாட்டேனென்று...
ஆசையாக நான் கேட்ட அனைத்தையும்
வாங்கி வைத்துள்ள அவரிடம்(என் தந்தை) அப்படி கூருவேன் இனி அவற்றை எல்லாம் என்னால் உபயோகிக்க முடியாதென்று...
வரும் பொழுது தனக்காக புத்தாடைகள் வாங்கி வருவான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும்
அவளிடம் (என் தங்கை) அப்படி கூருவேன் இனி என்னால் வாங்கி தர இயலாதென்று...
அன்புடனும், காதலுடனும் தன்னுடையவன்
வருவான் என்று பாசத்துடன் எதிர் நோக்கி பார்த்திருக்கும் அவளிடம்(என் துணைவி) அப்படி கூருவேன் இனி நான் வர மாட்டேனென்று...
இப்படிக்கு எல்லோரயும் ஏங்கவைத்து சுவற்றில் மாலையுடன் புகைப்படமாய் நிற்கும் நான்...