மொட்டை மாடி

இன்று மட்டும்
மழை வேண்டாம் என்கிறது மனது ....
மொட்டை மாடியில் காயும் துணிகள் !

மொட்டை மாடி
குடையாய் இருந்து
உங்களுக்காக
மழையில் நனைகிறது !

மொட்டை மாடி
நிழலாய் இருந்து
உங்களுக்காக
வெய்யிலில் காய்கிறது !

மொட்டை மாடி
மொத்தத்தில்
உங்களுக்காக
மௌனமாக
தியாகம் செய்து வருகிறது !

எழுதியவர் : வெ. நாதமணி (10-Jul-13, 8:24 pm)
Tanglish : MOTTAI maati
பார்வை : 77

மேலே