அன்னையுமானவள்....!
உருவம் தெரியும் முன்பு
உட்கருவாய் இருந்தபோதே
பாசம் வைத்து ஈன்றெடுத்தாள்
தாயுமானவள்.....
பாச சிறகினுள் பக்குவமாய்
பாதுகாத்து வளரவைத்தாள்
தந்தையுமானவள்........
துன்பம் கண்ட போதெல்லாம்
மடிசாய்த்து அமைதி தந்தாள்
உடன்பிறப்பானவள் ....
தோல்வி கண்டபொழுதெல்லாம்
தோள்கொடுத்து தோழமை தந்தாள்
நட்பானவள் .....
தருணம் எதுவாயினும்
என்மேல் அன்பானவள்......
அவளே -என்
அன்னையுமானவள்....!