அம்மா(3) !

அம்மா!
நீ
காணா இறையின்
காட்சி பொருளா ? - அவன்
ஆட்சியின் மாட்சியா? இல்லை
மறுமலர்ச்சியா ??

நீ
உன் உறவு கூட்டில்
பாதுகாத்து
பத்திரபடுத்திய
உயிர்எழுத்து நான் !

உன்
மொழி கேட்டு கிடந்து
நான் கேட்ட -உன்
தாலாட்டு
என் முதல் தேசியகீதம் !!
இதனால்
எம் மொழி தாய்மொழி
எந்நாடு தாய்நாடு என்று
மதித்து சிறக்கும்
மாண்பை பெற்டது !!!

அம்மா!
நீ தந்த
பால் எனக்கு
முப்பால் !
அப்பால் எப்பால் சிறக்கும் ??

உன்
கருவறை சுகம் கண்டிடவே
தெய்வ தூதுவர்களும்
பிள்ளையென வந்து
பிறந்தார்களோ ......?

அம்மா
நீயே - எந்தன் முதல்
பள்ளிகூடம் என்பதால்
பல்கலைகழகங்களும்
படிக்கிண்டன உன்னை !!

நீ
பக்தி இலக்கணம்
படித்தாலபெறலாம்
முக்தி !!

அம்மா !
உனக்காக ஒரு கவிதை
எழுத நினைக்கும்போது
அலங்கார சொற்கள்
அணிவகுத்துவிடுமோ .......!
அர்ச்சனையாம் உனக்கு
அலங்காரம் எதற்கு ??????
மழலையில் மொழிந்த
" அம்மா " - அதுதானம்மா
அழகு கவிதை !
Yentum
உயிர் கவிதை அம்மா !!!!!!!!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (11-Jul-13, 2:22 am)
சேர்த்தது : mohd farook
பார்வை : 64

மேலே