கண்ணீரால் அவளை தேடுகிறேன் ...........!.
(இந்தக் கவிதை இறந்த இலவரசன்
எழுதியதாக ஏன் இறுக்கக் கூடாது ..!
இது ஒரு கற்பனை )
-----------------------------------------------------------
கடல் கரை மணலில் அவளின்
காலடிகளை தேடுகிறேன் ......!
காற்றில் அவள் சிந்திய
சிரிப்பை கவலையோடு தேடுகிறேன் .......!
பார்வை அம்பாள் இதயத்தை
காயப் படுத்தி இதழ் ஒத்தடத்தில்
மருந்திட்டவளை................!
இன்னமும் தேடி அலைகிரேன் ..!
கனவில் வந்த அவளை
கண் விழித்து தேடுகிறேன்.....!
காணும் இடமெல்லாம் அவள்
என்று எண்ணி கட்டிப் பிடிக்க
ஓடுகிறேன் ......!
இதயக் கருவரையில் .....
விழியால் காதலை விதைத்தவள் ...
விளையாட்டாய் எங்கோ
பறந்து விட்டாள்.........!
பரந்தவளை என்னில்
கலந்தவளை..........!
கண்ணீரோடு தேடுகிறேன்.....!
கண்ணீர் தான் காதலுக்கு
உரம் என்றல் இந்த உலகம்
கண்ணீரால் மூழ்காதோ.......!
இளைஞ்சர்களே......!
தேடுகிறேன் .ஜாதிகள் காதலுக்கு
தடை என்றாள்.........
ஜாதிகளின் சங்கை
அருத்தெரிவோம்......!
இளைஞர்கலே........
உங்கள் இதய காதல்
கரும் பலகையில்......
ஜாதிகள் இல்லை என்று
எழுதிடுங்கள்............!