உழைக்கும் கரங்களே உயர்ந்தவை
உழைக்கும் கரங்களே என்றும் உயர்ந்தவை
உண்மைக்கு சாட்சியே இந்தப் புகைப்படம் !
பிழைத்திட உழைத்தே தீரவேண்டிய நிலை
பிறக்கும் உயிர்கள் அனைத்துக்கும் பாடம் !
உழைப்பவர் உள்ளமே என்றும் பூரிக்கும்
உழைக்காத நெஞ்சம் யாவும் யோசிக்கும் !
உடல்நலம் சீராகும் உழைக்கும் தேகம்
உடலில் இயங்கும் ஒவ்வொரு பாகமும் !
உழைத்து உண் என்பதே உலக வாக்கு
உழைப்பவன் மூலம் பிழைப்பதே அதிகம் !
உழைக்காமல் ஊதியம் பெற்றிட ஆசை
உழைப்பவரை ஏய்க்கும் மாந்தரே எங்கும் !
உழைத்து ஒய்ந்தவரை ஒதுக்கிடும் உலகம்
உழைக்கும் கரங்களை மறந்திடும் மானிடம் !
உழைக்கும் நெஞ்சங்களைப் போற்றுவோம்
உயிராய் உள்ளவரை உதவிடுவோம் நாமும் !
பழனி குமார்