நினைவுகள் சுகம்
நினைவு வந்தால் பார்க்கச்சொல்லி
நிழற்படம் தந்து சென்றாய்...!
கண்சிமிட்டத்தெரியவில்லை!
கைகோர்க்க வாய்ப்பும் இல்லை !
ஸ்பரிசம் தொட முடியவில்லை!
விழியின் மொழித்தொடர்புமில்லை!
அங்கம் அசையவில்லை!
அன்புமொழி பேசவில்லை!
அன்பே...!
நிழற்படம் காட்டிலும்
நினைவுகள் சுகம் எனக்கு..!