vijay kuncharan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vijay kuncharan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 7 |
உருவம் தெரியும் முன்பு
உட்கருவாய் இருந்தபோதே
பாசம் வைத்து ஈன்றெடுத்தாள்
தாயுமானவள்.....
பாச சிறகினுள் பக்குவமாய்
பாதுகாத்து வளரவைத்தாள்
தந்தையுமானவள்........
துன்பம் கண்ட போதெல்லாம்
மடிசாய்த்து அமைதி தந்தாள்
உடன்பிறப்பானவள் ....
தோல்வி கண்டபொழுதெல்லாம்
தோள்கொடுத்து தோழமை தந்தாள்
நட்பானவள் .....
தருணம் எதுவாயினும்
என்மேல் அன்பானவள்......
அவளே -என்
அன்னையுமானவள்....!
என் விழியின் மொழி
யாவரும் அறிவதில்லை
என்னவள் ஒருத்தியை தவிர.. !
எனக்காய் எல்லாம் தந்து
என்னுயிர் உள்சுமந்து
சற்றே பிரியும் வேளை
விளியோம் ததும்பும்
கண்ணீர் துடைத்து
தோள் சாய்த்து
வருடும் பொது...
ஆண்மை மறந்து
பெண்மை உணர்கிறேன்
தாயுமானவன்...
தினம் ஒரு கவிதை உனக்காக
எழுதி சேமிக்கிறேன்!..
இலக்கண இலக்கியங்கள் படிக்கவில்லை
உன் மனதை படித்தபின்பு
எல்லா மொழிகளும் புரிந்துகொண்டேன்
உன் மௌன மொழியைத் தவிர!...
நடைபழகும் குழந்தையாய் என் கவிதைகள்
உன்னை வந்து சேர்வதற்குள்
எத்தனைமுறை வீழ்ந்து எழுவது!...