எத்தனைமுறை வீழ்ந்து எழுவது
தினம் ஒரு கவிதை உனக்காக
எழுதி சேமிக்கிறேன்!..
இலக்கண இலக்கியங்கள் படிக்கவில்லை
உன் மனதை படித்தபின்பு
எல்லா மொழிகளும் புரிந்துகொண்டேன்
உன் மௌன மொழியைத் தவிர!...
நடைபழகும் குழந்தையாய் என் கவிதைகள்
உன்னை வந்து சேர்வதற்குள்
எத்தனைமுறை வீழ்ந்து எழுவது!...