என் அன்புத் தந்தைக்காக ...

கண்டேன் தாய்மையை
கருவில் சுமக்காவிட்டாலும்
கருத்துடன் வளர்த்ததால் ...

மார்பில் பாலில்லை
மகிழ்வுடன் தாலாட்டினார்
மற்றொரு தாயாக ...

அதட்டி வளர்க்கவில்லை
அன்புமழை பொழிந்தார்
அன்னைக்கு ஈடாக ...

இன்றும் உழைக்கிறார்
இயன்றதைக் கொடுக்கிறார்
இன்னொரு கர்ணனாக ...

அவரழுது கண்டதனால்
அந்நினைவுகள் வாட்டியதால்
அவளையும் தூக்கியெறிந்தேன் ...

தியாகமும் தர்மமும்
தினமும் கற்றுத்தந்து
திருக்குறளாய் வாழ்கின்றார் ...

இரவில் சென்றிடுவேன்
இருபாதம் பற்றிடுவேன்
இருவிழி மிதந்திட ...

எழுதியவர் : தமிழன்பன் என்றும் புதியவ (11-Jul-13, 2:01 pm)
பார்வை : 128

மேலே