பசுமரத்தாணி தானே குழந்தைகள்

அனுதினம் எனது பேருந்து பயணம்
முதியவர் ஒருவரது வருகை -
கண்டு கொடுத்த எனது இருக்கை.......,
பள்ளி பருவ பாலகனோருவன்
பதித்த பார்வையின் அர்த்தம்தனை
அறியவில்லை என் ஆறாம் அறிவு......!

அடுத்தநாள் அதே பயணம்
ஒரு முதிர்ந்த தாயிற்காக
தனது இருக்கையை தானம்
செய்தது அதே பிஞ்சு உள்ளம்................,
அன்று புரிந்தது அவன் முன்னாள்
பார்வையின் அர்த்தம்தனை,

ஏதோ ஒரு சாதனை
கர்வம் என் உள்ளத்தில்,
பசுமரத்தாணியாய் பதித்துக்கொண்ட
அவன் உள்ளம் என் மனதில்
ஆணிவேராய் பதிய.......,
ஆயிரம் கேள்விக்
கிளைகள் விரிந்தது அன்று,

சிந்திக்க கற்றுக்கொடுத்தது
நாம் எத்தனை குழந்தைகளுக்கு............?

சமூக சிந்தனை என்பதை
அறிந்த குழந்தைகள் எத்தனை..............?

இதுவரை அவர்கள் கண்டு
வந்தது தான் என்ன..................................?

ஏட்டுக் கல்வியும்
பரீட்சை தாளும் தானே...........................?

முதியோர் இல்லங்களில் பிறந்தநாள்
முத்தம் வாங்கிய பிஞ்சுகள் எத்தனை......?

விடுமுறைநாட்கள் சுற்றுலாவில்
விவசாய கிராமங்களையும்
சேர்க்கும் பெற்றோர்கள் எத்தனை...................?

மரக் கன்றுகள் நடவும்
மழைநீர் மகத்துவமும்
மனதில் கொண்ட மழலைகள் எத்தனை.........?

உணவுடன் சேர்த்து
உடற்பயிற்சியும் கற்கும்
செல்வங்கள் எத்தனை.......?

கற்றுக்கொள்ள குழந்தைகள் இருக்க
கற்றுக்கொடுப்பவர் மட்டும் சென்றது எங்கே..........?

படுக்கையறை கதைதான் எனினும்
பாரதியும் என்றும் மறவாமல் இருக்கட்டும்.......,

தேசியகீதத்தின் பொருள்யாதன கண்டு
தேசப்பற்றுடன் அவனும் தினம் பாட்டும்........,

படித்துமுடித்த புத்தகம் எனில்
அவனது ஏழை சகோதரனுக்கு
அவன் கரங்களாலே கொடுக்கட்டும்...............,

அவனது அளவிடா அற்ப்புத
சிந்தனைக்கு அன்புடன் தங்கள்
சிலநிமிடங்கள், அன்றாடம் இருக்கட்டும்..............,

தூக்கி நிறுத்தவில்லை எனின்
நேருவின் தூண்களும் தூருபிடித்துப் போகாதோ........?

வருங்கால தூண்கள் கொண்டு
இரும்புக் கோட்டை கட்டிட
அவர்களுக்கு குடிசைகளின்
குரல்களையும் அறியவைப்போம் வாருங்கள்.............!

எழுதியவர் : பொன்ராஜ் (11-Jul-13, 2:00 pm)
சேர்த்தது : ponraj
பார்வை : 83

மேலே