சொல்லாத காதல்

யாரும் தீண்டிடா வண்ண ஓவியம்
எவரும் புரிந்திடா மங்கை காவியம்
நீ சுவாசித்த காற்றை வாசித்த நிமிடம்
ரத்தநாளங்கள் உன் பெயர் சுமக்குது.

விழி அசைத்து வா! வா! என்பாய்
வாசல் வந்தால் விரட்டி அடிப்பாய்
வளையல் ஓசையால் பார்க்க சொல்வாய்
இமை திறந்தால் தரையோடு பேசுவாய்.

மாலையில் விழி தேடி சூரியன் வந்தால்
தலைகுனிந்து முகம் மறைக்கும் வெட்கத்தால்
அடைமழை பொழிவில் சொல்லாமல் மறைந்தால்
சுடரின்றி குளிரின் தனிமையில் துவண்டுகாணும்
சூரிய காந்தி பூவும் நீயும் தோழிகளோ?

தயக்கத்தின் பின் ஒளிந்து காதலை மாய்த்தாய்
மயக்கத்தில் மறந்தவன் வழிதேடி அலைகிறேன்
வசனமே இல்லாத நம் காதல் மொழி
விழி மட்டுமறிய வாய் பேச மறுக்க
சொல்லாத காதல் வெல்லாமல் போனது!!!!

- செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : செஞ்சிக்கோட்டை மா.மணி (11-Jul-13, 1:59 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 66

மேலே