இதுதான் காதலா??
எத்தனை பெரிய மலையையும்
புரட்டித் தள்ளி
தூசியாக்கி விடும்
எத்தனை பெரிய
வேலையையும்
எளிதாக முடித்து விடும்
என்னால்
உன் கனிவு நிறைந்த
கண்களை மட்டும்
நேர்கொண்டு பார்க்க முடியவில்லையே
ஏன்?
காதலா?
இதுதான் காதலா?
நிமிர்ந்து பார்க்க நினைக்கும் போதே
என் உயிர் அணுக்கள்
ஒவ்வொன்றும் சிலிர்த்து எழுந்து,
என்னை விழுந்து
விடச் செய்து விடும்
மாயம் என்ன
காதலா?
இதுதான் காதலா?