துள்ளி வருகின்ற பாசம்

தனிமையின் தூரம் இருக்கு - இனி
உரிமை பிறக்கின்றது உனக்கு

மகன் வழி பேத்தியாக உறவு
மகள் வழி பேரனாக வரவு

கிடைக்குமா ? ஏக்கம் மனதில் ஏழும்
இறைவன் நாட்டம் ஏதுவோ அது

பேர பிள்ளைகளின் அனைப்போடு
பெற்றவரின் மகிழ்ச்சி மன கடலில்

உரிமையில் பேரன்,பேத்தி அன்பு
உவகையில் முதுமையின் தெம்பு

பிஞ்சுகளின் வார்த்தையில் தெளிவு
நெஞ்சில் யதார்த்த பாசத்தின் பரிவு

தினம் அள்ள வருகின்ற பாசம்
இனி துள்ளி வருகின்ற நேசம்

இங்கு துள்ளி வருகின்ற பாசம் –எங்கள்
முதுமையை தாலாட்டும் நேரம் .............

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (14-Jul-13, 11:32 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 131

மேலே