கட்டுப்பாடு

தனிமையில் தத்தளிக்கும்,
தவறுகள் ஒன்று சேர்ந்து,
என் இளமையோடு போராடுகின்றன...
நீரில் மிதக்கும் என்னை,
அதன் சுழலில் சிக்க வைக்கப்பார்க்கின்றன..
மதுபான வகைகள் எல்லாம்,
மண்டியிட்டு வந்து தலை திறக்கின்றன...
ஊதும் உயிர் கொல்லிப்புகைகள்,
காற்றோடு வந்து என் சுவாசம் கலக்கின்றன...
தங்க நகைகள் தள்ளி நின்று சிரிக்கின்றன...
கல்லாப்பெட்டிக்குள் பண நோட்டுக்கள் பல் இழிக்கின்றன...
கன்னிப்பெண்களின் கவர்ச்சியில்,
கரும நேரங்கள் செயலிழக்கின்றன...
என்ன செய்வது???
என் மார்க்க வரையரை கண்டு,
அத்தனையும் என் மூக்கு நுனியோடு,
சுதந்திரத்தை இழக்கின்றன...

Go DASH hanaf

எழுதியவர் : ஹனாப் (14-Jul-13, 11:39 am)
சேர்த்தது : கடற்கரை மைந்தன்
பார்வை : 102

மேலே