ஒற்றுமையே நலம் சேர்க்கும்
ஊர்கூட தேர் நகரும்
மேகங்கள் ஒன்று சேர மழைபொழியும்
ஈக்கள் கூட தேன் சேரும்
மரக்கூட்டம் காடாகும் ..............
ஒளி பெருகும் தீபங்கள் சேர
உயிர் வளரும் அணுக்கள் கூட
சிறு துளியே பெருவெள்ளமாய் மாறும்
சிந்தனையில் நீர் செலுத்தியே வாரும் ............
பலம் பெருகும் கைகள் சேர
குன்றும் கரையும் ஒற்றுமை கூட
அனைத்து பழகு அணையையும் தடுக்கலாம்
அனைத்தையுமே ஒற்றுமையால் வெல்லலாம் ......
ஓர் கையால் வளமும் கிடையாது
ஒன்று சேர எதுதான் முடியாது
நீ நினைத்தால் மனிதா நிகழ்த்தலாம்
உன் நிலைமையையே தலைகீழாய் மாற்றலாம் ....
ஒற்றுமை பலத்தை இன்றே உணரு
பிரிவினை வாதத்தை இன்றே தவிரு
கெட்ட காலங்கள் நேற்றோடு போகட்டும்
நாளை முதலாவது நல்லதாய் நடக்கட்டும்..........
நீ செத்து நீயே புதைந்துவிட முடியுமா
நீ மட்டும் உழைத்து உணவு காண முடியுமா
ஒவ்வொருத்தர் உழைப்பு ஒவ்வொன்றிலும் இருக்கு
ஒற்றுமை ஒன்றுதான் அதன் பின்னே இருக்கு ..........
ஆயிரம் அனுபவம் பட்டும் திருந்தல
எத்தனையோ உயிர்கள் மடிந்தும் மாறல
உன்னை திருத்த கடவுளா வருவார்
கடவுளே வந்தாலும் குழம்பியே போவார் ..............
வீணான வாதத்தை இன்றே தவிரு
வெற்றியின் விலாசமே ஒற்றுமைதான் உணரு
மனத்தால்கூட கசப்புகள் வேண்டாம்
இனிமை சேர்த்து இன்பமாய் வாழ்வோம் ...............