இதன் பெயர் என்ன

உன் சிறகு விரிந்து
மேலே நீ பறக்கும் போது
என் மனம் பொறுக்குதில்லை
என் வயிறு எரிகிறது
என் மனமோ குமுறுகிறது .....


நீ
என் நண்பனாய் இரு
என் தோழனாய் இரு
என் பகைவனாய் இரு
என் உறவாய் கூட இரு
ஆனால்
உன் முகம் சிரிக்கும் போது
என் முகம் சுழிக்கிறது ....


உன்னோடு நானும்
நெடு நாளாய் பழகியிருக்கிறேன்
உன் குணம் நானும் அறிந்திருக்கிறேன்
உன்னால் நானும் முன்னேறியிருக்கிறேன்
இருந்தும்
உன் உயர்வு எனக்கு பேரிடியாய்தான் இருக்கிறது ...

சூரிய ஒளியில்
சந்திரன் மிளிர்ந்தாலும்
ஒரு போதும்
சூரியன் சந்திரனை சுட்டதில்லை
மலர் தேனை
தேனி சுவைத்தாலும்
ஒரு போதும்
மலர்கள்தங்கள் இதழை குவித்ததில்லை.....

ஆனால்
நான் ஆறறிவு பெற்றதால்தான்
என்னமோ தெரிவவில்லை
என் மனம்
எப்போதும் உன்னில் குறைகளையே தேடுகிறது ....


உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்..
இந்த நோயின் பெயர் என்ன...?
நானும் பல வைத்தியர்களை
நாடிவிட்டேன் .....
இதன் பெயர்....
பொறாமையா......?
இல்லாவிடில்
என் இயலாமையா ....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (14-Jul-13, 1:05 pm)
Tanglish : ithan peyar yenna
பார்வை : 219

மேலே