பிடிச்சிருக்கா .....?

என்னை விட்டு சென்ற போது
பெண்ணே நீ கூறிய வார்த்தை
ஞாபகமிருக்கா......?

கண்கள் ததும்பியவனாய்
நான் செய்வதைரியாது நின்றனே
அதுவாவது ஞாபகமிருக்கா......?

உந்தன் கைபிடித்து நானும்
கடற்கரை மண்ணில்
நம் பாதம் சேர்த்து நடந்தோமே
அந்த கடற்கரையாவது
பெண்ணே உனக்கு
ஞாபகமிருக்கா......?

கோடையில் இளைப்பார செல்வோமே
அந்த ஆலமரம்
மன அமைதிக்காய் செல்வோமே
அந்த அநாதை இல்லம்
இரவுகளை கழிக்க ஒன்றாய் அமர்ந்த
அந்த தெருவோர நாட்காலி
எல்லாமே பெண்ணே உனக்கு
ஞாபகமிருக்கா......?

அப்படி சந்தோசமாய்
கழிந்த நம் வாழ்க்கையில்
என் மாத வருமானம் போதாதென்று
என்னை அறுத்துவிட்டு
அமேரிக்கா மாப்பிள்ளையோடு போனியே
அதாவது பெண்ணே உனக்கு
ஞாபகமிருக்கா......?

பணத்தை பார்த்து போன
உன்னை அவன்
விதவையாய் ஆக்கிவிட்டானே
பெண்ணே அது உனக்கு பிடிச்சிருக்கா ....?

நாளுக்கு ஒரு பெண் என்று
வாழ்ந்த அவன் வாழ்க்கையில்
தேவதையாய் போன உன்னை
தோஷம் பிடித்த நோய் வந்து
அவன் உன்னை வாழ்கையின்
இடைநடுவே தனியா விட்டானே
பெண்ணே அது உனக்கு பிடிச்சிருக்கா ....?

இப்போதும் நான் இருக்கிறேன்
உனக்காக .....
நீ விரும்பினால் சொல்லு
உன்னையே மணம் முடிக்கிறேன் எனக்காக...
ஆனால் இப்போதும் எனக்கு அதே மாதச்சம்பளம்தான் ....
பெண்ணே நீ சொல்லு
இப்போதாவது என்னை உனக்கு பிடிச்சிருக்கா ....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (14-Jul-13, 7:35 pm)
பார்வை : 1114

மேலே