மோகினிப் பிசாசு

கனவில் வந்து
என்னடி செய்தாய்-என்
உறங்கும் விழிகளை
விரல்களால் சீண்டினாய்!

நான்
மோகினிப் பிசாசு
வந்ததோ என்று
போர்வைக்குள்ளே-உன்
பெயர் ஜெபித்தேன் !

பதறித் துடித்து
ஓட்டம் பிடித்தது-இனி
எந்தப் பிசாசும்
என் பக்கம் வராது !

விடிந்ததும் எனக்கு
நினைவில் வந்தது-உன்
அழகு முகம்தான்
இரவில் வந்தது!

என்ன!
ஒப்பனை கொஞ்சம்
அதிகமாய் இருந்தது
அதுதான் கண்ணே
பிசாசோ என்று
குழப்பம் செய்தது!

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (14-Jul-13, 11:23 pm)
சேர்த்தது : raja.arp
பார்வை : 81

மேலே