முள்ளில்லாத பூக்கள்

ஒட்டிய வயிறோடு
பாத்திரம் துலக்குகிறது
ஐம்பது வயசு குழந்தை !

பீசா,ஜூஸ் சாப்பிட்டு
ஜிம்முக்கு போகிறது
இருபத்தி ஐந்து வயசு
உடல் வனப்புக்காக !

அழகுப் போட்டியில் சேர
குழந்தை வேண்டாம் என்கிறது
ஒப்பனை அழகி !

பள்ளிக்கு பாடம் படிக்க
தள்ளாடிச் செல்கிறது
அறுபது வயசு குழந்தைகள் !

அதிகாரம் செய்து விரட்டி விரட்டி
வேலை வாங்குகிறது பதினெட்டு வயசு கிழவி
ஐம்பது வயசு குமரியை !

பள்ளிக் கூடம் போகாமலே
பாடம் நடத்துகிறது
நான்கு வயது வாத்தியார் !

சிங்கக் குட்டி என
ஊரார் குழந்தைகளை கொஞ்சுகிறது
குழந்தையை பறிகொடுத்த
மனநிலை சரியில்லாத தாய் !

வாசத்தை காட்டி அனைவரையும்
மயக்கி இழுக்கின்றது
பந்தலில் சிரிக்கும் மல்லிகைபூ !

பிச்சை எடுக்கின்றது
வயிறு(பாகனின் ) வளர்க்க
கோயில் யானை !

எழுதியவர் : தயா (14-Jul-13, 10:46 pm)
Tanglish : mullillatha pookal
பார்வை : 89

மேலே