மனிதமே மாயம்

மனிதன்
இறைவன் படைத்து இவ்
உலகில் விளையாட விட்ட
பொம்மைகள் தான் மனிதர்கள்
வெறும் தசையாலும்,எலும்பாலும்
படைத்து விட்டான் இவ் உடலை
அதற்க்கு உயிர் பெற காற்றையும்
ஊதி விட்டான்

என்ன கொடுப்பனவு இவ்
தசைக்கும்,எலும்புக்கும்
அன்றாடம் நிறைவான ஆகாரம்
அழகு படுத்திக் கொள்ள
விதம் விதமான ஆடை,அணிகள்
என்ன புண்ணியம் தான்
செய்தது இவ் உடல்

இவ் தசையும்,எலும்பும் நிறைந்த
இவ் உடலுக்குள்ளும்
அன்பு,ஆசை,பொறாமை என்று
எத்தனை வடிவங்கள்
அது அன்பு கொள்ள மண்ணில்
அதை போன்றே ஆயிரம் உறவுகள்

ஆனால்
மனிதனோ அறிவதில்லை இவ்
உடல் நிரந்தரம் அற்றது என்பதை
அவனே கொடுத்தான் இந்த
தசையும் ,உடலும்,உயிரும்
அவனே ஒருநாள் எடுத்தும்
கொள்வான் என்பதை

மரணம் என்பதை இன்னொருவர்
அடையும் போது
நாம் கதறுகின்றோம்,துடிக்கின்றோம்
ஆனால்
எமக்காக இன்னொரு நாள்
இன்னும் சிலர் கதறுவார்கள்
இது தான் இந்த உடலின் நிலைமை

என்றோ ஒருநாள் மண்ணுக்குள் போகும்
இந்த உடலுக்கு
எத்தனை அலங்காரமும் எத்தனை
ஆசைகளும்
கடைசியில் எல்லாமே மாயமாகத் தான்
போய் விடுகிறது
பாசம் கொண்டு ,அன்பு காட்டி
எத்தனையோ கனவுகள் கண்டு
வாழ்ந்திட்ட இவ் வாழ்க்கை
ஆறடி மண்ணுக்குள் புதைந்து
மண்ணுக்கும்,புழுவுக்கும் தான்
உணவாகிப் போகின்றது

என்னதான் மார்பிலும்,தலையிலும்
அடித்துக் கதறி அழுதாலும்
போன உயிர் வரத்தான் போகிறதா?
அல்லது
பெட்டிக்குள் இருக்கும் அந்த உடலுக்கு
கேக்கத் தான் போகிறதா?
இதை நினைத்துப் பார்ப்பதில்லை யாருமே
அந்த நொடியில்
மண்ணுக்குள் மண்ணாக போகும்
இவ் உடலுக்கு தானே இப் பூமியிலே
இத்தனை கால வாழ்க்கைப் போராட்டமும்

எழுதியவர் : (14-Jul-13, 10:36 pm)
பார்வை : 98

மேலே