என் மகள்

பாலை உலகைத்தன் ஆகிருதியால்
ஆட்கொண்ட மணலின் வண்ணமவள்-

மஞ்சள் வெயிலின் துகள்
பண்பெடுத்துப் பெண்மகளானாள் !

ஓரப் பார்வை யிலெனைத்
தடுத்தாட் கொண்டாள்-ஒற்றைச்
சொல்லால் துணைக் கோளாய்
சுற்றவிட்டா ளவள் பின்னே !

வானவில் வளைகரத்தாள்
பிறையழகு நிறை முகத்தாள்!

நெருப்புக்கும் வெளிச்சம்தரும் விழிகள்
கரும்புக்கும் இனிப்பூட்டுமிவள் மழலை!

செல்களின் சிறப்பான சேர்க்கை
அழகியல் அவள்நடமாடும் பாதை !

என் பொழுதுகளை உழுதிவள்
மகிழ்வை விதைத்தாள்- கனவுகளின்
நினைவிலும் கண்சிமிட்டிச் சிரித்தாள்!

பூவில்விழுந்து சிதறித் தெறித்த
மழைத் தூரலவள் பேச்சு -
அதனெச்சில் முத்துக்கள் கோர்த்து
யாப்பினை யாதென நானறிந்தேன் !

அவளென் வாழ்வின் "பொருளதிகாரம்" -
இல்லையேலென் வாழ்வின்கனம் முழுதும்
--------------------------------------------------வெற்றிடம் !

எழுதியவர் : நிலாநேசி (15-Jul-13, 7:13 am)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே