எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணய அதிகாரத்தை ரத்து செய்க...ஜெயலலிதா...!

ஒருபுறம் உலகமயமாக்கலுக்கு எதிராக செயல்படும் கருத்து சொல்லும் தமிழக அரசு மறுபுறம் எண்ணெய் நிறுவன அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை என்று தமிழக அரசு செயல்பட்டு வருகின்றன என கருதலாமா...?

எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்துவரை, தங்களுடைய லாப நோக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலை கொள்ளாமல், மனம் போன போக்கில் பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொண்டு வருகின்றன.என்றார்.

நாட்டின் பொருளாதாரம் நலிந்து கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதற்கான காரணிகளை களைய நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலையை அடிக்கடி உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல்,

நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசு உயர்த்தி 15 நாட்களே ஆகியுள்ள நிலையில், மீண்டும் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 55 காசு என்று உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் என்றார்.

எண்ணெய், சமையல் எரிவாயு இறக்குமதி நிறுவனங்கள் அணைத்து தேசிய கட்சிகளுக்கும் நன்கொடைகள், விருந்து மற்றும் பல சேவைகளை வழங்கி வருவதால் எண்ணெய் விலை உயர்வை ஒரு பெயரளவில் எதிர்ப்பதும் பின்பு மக்கள் விலை உயர்வை கண்டித்து போராடாமல் பச்சைத் தண்ணீரை ஊற்றி அணைப்பதும் என்று இருக்கையில்,

விலை ஏற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நம்பலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (15-Jul-13, 3:30 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 60

மேலே