மீனவர் வாழ்வும் நிச்சயம் சிறக்கும்

ஆட்சிகள் மாறுது காட்சிகள் மாறுது
கடிதங்கள் பறக்குது பதிலும் வருகிறது !
மௌனம் காக்குகிறது மத்திய அரசும்
வேடிக்கைப் பார்க்கிறது மாநில அரசும் !

உழைத்து வாழும் உண்மை மீனவன்
பிழைத்து வாழக் கடலில் மிதக்கிறான் !
உலையும் பொங்கிட வயிறும் நிறைந்திட
வலையை வீசுகிறான் மீன்களை அள்ளிட !

கள்ளமிலா உள்ளமுடையோன் தமிழன்
உள்ளமிலா வேடதாரி இலங்கைக்காரன் !
எல்லை தாண்டாத எண்ணமே தமிழனுக்கு
தூண்டுவதே தொழில் சிங்களப் படைக்கு !

கடலில் போராடி கண்ணீரோடு வாழுகிறான்
அலைகளின் நடுவே அவதியுறும் தமிழன் !
தாக்குகிறான் இலங்கைப்படை தடையின்றி
சிக்குகிறான் நம்தமிழன் சிங்களவர் கையில் !

தவறே இழைக்கா தமிழன் இலங்கை சிறையில்
முடிவே இல்லையா சிங்கள வெறியனுக்கு !
தமிழகமே இணைந்தால் வழியும் பிறக்கும்
நம்மீனவர் வாழ்வும் நிச்சயம் சிறக்கும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Jul-13, 10:07 pm)
பார்வை : 66

மேலே