சாதித்தது என்ன ....?
ஜாதி அரக்கனின் கோர பற்களில்
காதலர்களின் செத்த உடல்கள்
ஜாதி என்னும் சனியனே ...!
காதலை வாழ விட மாட்டாயா ?
ஓட்டுக்காய் சதுராடிய ஜாதிய வாதிகலே..!
உங்கள் ஜாதி தாகம் தீர்ந்துவிட்டதா.......?
இணையும் இரு சமூகம் உங்கள் கண்களை உறுத்தியதா ........?
மனிதத்தை கொன்று மலத்தை தின்பவர்களே....!
இறந்த இளவரசனை எழுப்ப உங்களால் முடியுமா.....? ஜாதிகள் வாழ காதலை
காவு கேட்டவர்களே ....! சின்ன திரையிலும்
சினிமாவிலும் காதல் என்றாள் கை கொட்டி
ரசிக்கும் நீங்கள் ஜாதிக்காய் இனி சாதிக்கப்
போவது என்ன ........?
.