ஒரு காலை நேர குளியல்

காலை நேர குளக்கரை
குளத்து தண்ணீர்
நனைக்க முடியாத
தாமரை இலைகளை
பனி துளிகள் நனைத்து வைத்திருந்தது

ஆங்காங்கே தாமரை பூக்களும்
அள்ளி பூக்களும்
அலங்கரிக்கபட்டிருந்தன
குளம் முழுவதும்

குளக்கரை பிள்ளையார்
விபூதி வாசம்
விடியலை வரவேற்றிருந்தது

காலை குளிரோ
பற்களை
பரத நாட்டிய கலைஞனாக்கியது

துண்டை கட்டி கொண்டு
குளிரை அடக்கிக்கொண்டு
முதல் காலை தண்ணீரில் வைக்கும் போது
உச்சம் தலையில் சில முடிகள்
எழுந்து வணக்கம் வைத்தது தண்ணீருக்கு

முதல் கால் வைத்ததுமே எடுத்து விட
சில துளி தண்ணீரை அள்ளி
தீர்த்தம் போல் தெளித்ததால்
துள்ளி குதித்து குளிர்ந்து நெலிந்தேன்

கண்ணை மூடிக்கொண்டு
இஷ்ட தெய்வத்தை வேண்டி கொண்டு
எகிறி குதித்தேன் நடுக்குளத்தில்

ஒரு பெரிய நிம்மதி பெரு மூச்சு
இனி ஒரு வாரத்துக்கு குளிக்க வேண்டியதில்லை

எழுதியவர் : பாலமுதன் ஆ (16-Jul-13, 11:19 pm)
பார்வை : 214

மேலே