பெண்ணின் கண்ணீர்

ஒரு பெண் தான்
திருமணம் செய்து
கொண்டு கணவனுடன்
செல்லும் பொது
தனது குடும்பத்தையும்
தனது தோழிகளையும்
விட்டு செல்கிறோம்
என்று அழுவாள்!!!!!

கணவனுடன் சென்றதும்
அவனிடம் பழகிய பின்பு
நல்லவனாக இருந்தால் ஆனந்த
அழுகை , கெட்டவனாக இருந்தால்
வேதனையோடு கூடிய அழுகை!!!!

தான் கர்ப்பம் ஆனா பிறகு
தாய் ஆக போகிறோம்
என்று சந்தோஷமான அழுகை

அந்த குழந்தை பிறக்கும் போது
இடுப்பு வலியுடன் கூடிய
தன் குழந்தையை பார்க்க போகிறோம்
என்ற அழுகை !!!

பிறக்கும் குழந்தை
ஆணாக இருந்தால்
கடைசி காலங்களில்
தன்னையும், தன் கணவனையும்
காப்பாற்றுவானா என்று அழுகை!!!!

பெண்ணாக இருந்தால்
அந்த பெண் வயதுக்கு வரும் போது
தன் பிள்ளையும் பெரியவள்
ஆகிவிட்டால் என்று அழுகை !!!

பிறகு அப்பெண்ணுக்கு
நல்ல மாப்பிள்ளை
கிடைக்க வேண்டும் என்று
யாருக்கும் தெரியாமல்
இரவில் புலம்பி அழுவாள் !!!

இத்தனை வேதையோடு
ஒரு பெண் முகம்
தெரியாமல் ஒரு ஆணுடன்
திருமணம் என்று
பெயரில் கை கோர்க்கும் போது
அந்த ஆண் தனது உயிராக
பார்துக்குக்கொள்ள வேண்டுமல்லவா !!!

ஆனால் பல இடங்களில்
பெண்கள் ரொம்ப பாதிக்க
படுகிறார்கள் திருமணம்
என்ற வேலிகளால் !!!

ஒவ்வொரு ஆணும் தனது
மனைவியை உயிராகவும்
தனக்குள் ஒருத்தியகவும்
நினைத்து வாழ வேண்டும்
ராமனைப் போல...........

எழுதியவர் : வே.அழகு (19-Jul-13, 12:02 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : pennin kanneer
பார்வை : 396

மேலே