காதல் வலி
அன்னையின் அரவணைப்பா?
அய்யனின் அச்சுறுத்தலா?
அன்பாலனனின் ஒருசில
வினாடி பரிந்த்துரையாடல்களா?
பார்தத கண்களில்
பார்த்திடாத சோகமாக ...
பாவிநெஞ்சத்தில்
பாரங்கல்லாக காதல்
வருகிறேன் உன் மனைவியாக ...
என்று உரைக்கவும் ,
விடைகொடு என்னை
இன்றுடன் விலகுகிறேன்
என்று உரைக்கவும்
இயலவில்லை அன்பே!!
அன்பாலனை காட்டி
அத்தியாயத்தை முடிக்கவும்
அறிவானவன் இவன் என்று
அறிமுகபடுத்தவும்
இயலவில்லை தந்தையே!!
அன்னையே,
உன் கருவில் உன் உருவில்
இருந்தேன்ன பயன்?
நாளை உன் மகளின்
உள்ளக்கிடங்குகளில் ஊசலாடும்...
உருக்கத்தை கேட்பாயோ?
கேட்டால் உன் மனம்
என்னை வெறுக்குமே,
சிறு காய்ச்சல் என்றாலும்
உரைத்த என் மனம்
சொல்லாவிட்டால் குமுறுமே?
நிஜம் என்று உரைக்கவா
நித்திரை என்று கலைக்கவா
எனக்குள் ஏனோ பரிதவிப்பு....
ஏனோ புரியவில்லை....
புரிந்தாலும் விடுவதில்லை
விடாப்பிடியான காதல்!!