உன் இதயமெனும் மடியில் உறங்க வேண்டும் 555
என்னவளே...
தினம் நீ அள்ளி முடிக்கும்
உன் கூந்தலில்...
ரெட்டை ஜடை பின்னி
நான் பூச்சூட வேண்டும்...
தினம் உதிரும்
உன் ஒற்றை முடியினை...
தினம் தினம் நான்
சேகரிக்க வேண்டும்...
மூங்கிலில் பாட்டிசைக்கும்
புல்லாங்குழலாய்...
என் இதழ்களால்
உன் இதழில்...
தினம் யாழிசை
மீட்ட வேண்டும்...
மின்சாரம் வீசும்
உன் விழிகளை...
நான் முத்தமிட
வேண்டும்...
மின்சார
தாக்குதலில்...
உன் மடியில்
விழ வேண்டும்...
என்னை நான்
மறந்து உறங்க வேண்டும்...
உன் இதயமெனும்
மடியில்.....