என் கணவனாக வரப்போகும் காதலனிற்கு ஓர; மடல்

நீ தந்த பாசமலர்களை
காதலெனும் நுலில் கோர்த்து கட்டிய மாலை ..............
இது கவி வரிகள் இல்லை
உனக்காக நான் தொடுத்த மாலை

உன் விரல் பிடித்து ஒன்றாக
நடந்த விட ஆசை

சின்ன சண்டைகளிட்டு கோபங்கொண்டு - நீ
கெஞ்சி கேட்கும் மன்னிப்பில்
திளைத்திட ஆசை......

உன் தோள் சாய்ந்து
உன் சோகங்களும் என் சோகங்களும்
மறந்திட ஆசை....

வாழும் போது உன் கூட
வாழ ஆசை.....
சாகும் போது நான் மட்டும்
சாக ஆசை................

எழுதியவர் : pirarththana (20-Jul-13, 2:25 pm)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 211

மேலே