அவள் விழி அருகே ..............
விழி அருகே விழி அருகே
அவள் பார்வை படுகையில் தொலைகின்றேன்
நிழலின்றி அலைகின்றேன்
அவள் நிழலாய் மாறி திரிகின்றேன்!!!!!!!!
அவள் பாதம் படும் இடமெல்லாம்
ஓவியம் தானாய் காணுகின்றேன்
அவள் தானாய் வெட்க்க படுகையில்
வானவில்லின் வண்ணமெல்லாம்
குறைவோ என்றே எண்ணுகின்றேன்