நிறம் மாறும் ஆசை !
**************************குழந்தையின் ஆசை ***********************
குழந்தை அகால வேளையில் (இரவு12மனிக்கு)
பலூன் வேண்டும் என்று அழுகிறது .
அந்த நேரத்தில் பலூன் கிடைக்காது எனபது நமக்குத் தெரியும் .
ஆனால் குழந்தைக்குத் தெரியாது ! அடம் பிடித்து அழுது கொண்டே இருக்கிறது .
நீண்டநேரம் அழுதும் பலூன் கிடைக்கவில்லை .
அழுது அழுது ,ஓய்ந்து , சோர்ந்து போய் உறங்கிப் போய்விடுகிறது .
இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து குழந்தை விழித்தால் மீண்டும் பலூன் வேண்டும் என்று
அழுவதில்லை .காரணம் இனி அழுதாலும் பலூன் கிடைக்காது என்று புரிந்து கொண்டு வேறு பொருள்
கண்ணில் படும் வரை அமைதியாக இருக்கும்
அக்குழந்தைக்குத் தேவையோ இல்லையோ
வேறுபொருள் புதியதாகக் கண்ணில் தென்பட்டவுடன் அந்தப் பொருள் வேண்டும்
என்று அடம் பிடித்துக் கேட்க்கும் பொது நாமும் வேறுவழியில்லாமல் பலூன்தான் வாங்கித்தர
முடிய வில்லை வீட்டில் இருக்கும் பொருள் அதுவும் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் பொருள் (அது பந்தாக இருக்கலாம் )
என்பதாலும் குழந்தையைத் திருப்திப் படுத்த
வேண்டும் என்ற பாச,மற்றும் இர க்க உணர்வாலும் ,குழந்தைக் கேட்டபோருளைஎடுத்து கொடுத்து விடுகிறோம் .குழந்தையும் சமாதானமாகி அமைதியாக கிடைத்தப் பொருளைப் பெற்றுக்கொண்டு
மனம் அமைதி அடைந்து தூங்கிப் போய் விடுகிறது.
ஆசை வேறு வேறு வடிவங்களைப் பெறுகிறது .
நிறம் மாறும் ஆசைகள் குழந்தைகளுக்கு
மட்டுமா? பெரியவர்களுக்குந்தான்!! என்ன சரிதானே நண்பர்களே !