தமிழனா நீ..?
எப்படி வாழனும் தெரியலையே
எப்படி வாழ்வோம் புரியலையே
இப்படி வாழ்வது சரியில்லையே
இப்படி வீழ்வதும் முறையில்லையே
ஊழலை உலகுக்கு அறிவித்த கட்சியும்
ஊழலால் குடும்பம் வளர்க்கும் கட்சியும்
உன்னைத் திண்றது போதவில்லை - இந்திய
மண்ணைத் திண்றது போதவில்லை - உலக
வங்கியைத் திண்று கொழுக்கிறதே - இந்த
பேரவலம் நீங்குவதெப்போ யாரரிவார் - இங்கே
ஆயிரம் நாடகங்கள் நடத்தி - பலப்பல
ஆயிரமாயிரமாய் கோடிகளை அள்ளி - பதுக்கி ஏய்த்துக் கொண்டிருப்பதும் அறியாயோ - அறிந்தும் ஏனிருக்கின்றாய் தமிழா நீயும்! - இப்படியொரு பிறவியாய் என்றும் இருப்பாயெனில் - இனியும் இழப்பதேது இங்குணக்கு வாழ வழியுமேது?
எப்படி பங்களிக்கும் பக்கத்துமாநிலமும் - எதிலும்
எப்படி கரங்கொடுக்கும் உந்தாய்நாடும் - நாம்
கொடுத்ததுதான் கிடைக்கும் நம் - பெயர்சொல்லி
கொடுப்பதுதான் கிடைக்கும் நமக்கு மீண்டும்!
படர்ந்திருக்கும் புல்லுருவிகளும் - உன்னில் ஒளிந்திருக்கும் அடிமைத்தனமும் - அழிக்கிறதே
நம்மையும் நம்குலத்தையும் அறிந்தாயோ அறிவுல்லவனே!
உந்தன் சுயஅறிவை எப்போது பயன்படுத்துவாயோ?