அழுக்கடைந்த என் சமூகம் அழகாய் மாறும் காலம் வருமா?

அழுக்கடைந்த என் சமூகம்
அழகாய் மாறும் காலம் வருமா?

சாதி சாக்கடையில் குளிக்கும்
மனித முகம் பொருத்திய
மிருகம் என் நாட்டில் அதிகம்...!

இனச்சண்டை ஏதும் வந்தால்
சந்தோசப்படும் ஈனப்பிறவிகள்
இன்னும் சுவாசம் சுமக்கின்றன...

திறந்த வெளி 'சாக்'கடையில்
குவிகிறது ஜனக் கூட்டம்...
மது என்ற போதையிலே
மாய்கிறது மனித இனம்...!

பருவம் வந்த சிலநாளில்
பறந்து செல்கிறது பருவ கிளிகள்...
பத்து நாள் கூட தாங்காமல்
பறிபோகும் பசுந்தளிர்கள்...!

பாரத தாய் கதறுகிறாள்
மானம் கெட்ட மனிதர்களால்
நாட்டின் கற்பு
விலை பேசப்படுவதால்...!

மனம் மட்டும் இருந்தால்
மரங்கள் கூட மன்னிக்காது
மாசடைந்த மனித இனத்தை...!

எழுதியவர் : கதிர்மாயா (20-Jul-13, 10:23 pm)
பார்வை : 94

மேலே