உற்சாக நெருப்பு படரட்டும்!
உற்சாக நதி
உள்ளத்தில் நகர்ந்தால்
பிரச்சனை முடிச்சுகள் வெடித்துச் சிதறும்!
உற்சாக நெருப்பு
உள்ளத்தில் படர்ந்தால்
உலகம்
உனது விரல்களில் சுழலும்!
சோம்பல் வில்லை உடைத்தெறிந்தால்
வெற்றிச் சீதையை
விவாகம் முடிக்கலாம்!
கனவுகளின் வாசல்
திறந்தே இருந்தால்
உழைப்பு தேவதை
உள்ளே வருவாள்.