ரசிகர்களை ஏமாற்றும் பெரிய நடிகர்கள்!

அன்பு நண்பர்களே! நீங்கள் நிறைய சினிமா பார்க்கும் பழக்கமுடையவரா? பெரிய நடிகர்களின் விசிரியா? கொஞ்சம் இக்கட்டுரைக்குக் காது கொடுங்கள்.

தற்போது ஒவ்வொரு புதிய படங்கள் வரும்போதும் 'யானை வரும் பின்னே! அதன் ஓசை வரும் முன்னே!'என்பது போல் ஊடகங்களிலும்,பத்திரிக்கைகளிலும் அந்தந்த நடிக நடிகைகளின் பேட்டிகளும் படங்களும் வருகின்றன.இதற்கு இந்த நடிகர்களின் ஊடக நண்பர்கள் மிகவும் உதவுகிறார்கள்.

இந்தப் பேட்டிகளை நன்கு கவனித்தீர்கள் என்றால் இவை யாவுமே படம் ஓடவேண்டுமே என்ற பயத்தில் படத்துக்கு தரப்பட்ட விளம்பரங்களாகவே இருப்பதை உணர முடியும்.அதுவும் இந்த பத்தாண்டுகளுக்குள் பார்த்தீர்களானால் ஒவ்வொரு படம் வெளிவரும் முன்பாக ,தனக்குப் போட்டியாளர் என நினைக்கும் நடிகர்களை சீண்டுவதுபோல் பேட்டி கொடுப்பதும்,
அரசியல் பற்றி ஏதாவது திரியைக் கொளுத்திப் போடுவதும்,படம் முடிவதற்குள்ளாகவே இயக்குனருடன் சண்டை வந்துவிட்டது போலவும் ,பேட்டிகளைக் கொடுத்துக் கலக்கி வருகின்றனர்.

இன்னும் சில திருமணமாகாத நடிகர்கள் படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகையைக் காதலிப்பது போலவும் ,அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவது போலவும் பேட்டி கொடுத்து ரசிக மகா ஜனங்களை கொஞ்ச நாட்கள் தன்னைப் பற்றியே பேசும்படி செய்கின்றனர்.
படம் முடிந்து வெளிவந்த பின் அந்த நடிகரும் ,நடிகையும் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவர். ஆனால் ரசிகர்களோ,'அவர் திருமணம் வரை பேசிக்கொண்டு திரிவர்.

இப்படி இப்போது சிம்பு ,ஹன்சிகா காதல் என்று ஒரு செய்தி உலவுவது ஒரு உதாரணம்.மேலும் ஒரு சில நடிகர்கள் அரசியலுக்கு வரப்போவதுபோல் பாவ்லா காட்டிக் கொண்டே வருடத்திற்கு இரண்டு படங்களை வெற்றிகரமாக ஓட விட்டுக் காசு பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். தன தலைவர் எப்படியாவது அரசியலுக்கு வந்து விடுவார்.நாமும் ஒரு எம்.எல்.ஏ.ஆகிவிடுவோம் என்ற கனவிலேயே வாழ்ந்து கொண்டு வாழ்கையை இழக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!

மேலும் ,முன்பெல்லாம் ஒரு படம் நூறு நாட்கள் ஓடி சம்பாதித்த தொகையை முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் எடுக்க வேண்டிய கட்டாயமும் இந்த நடிகர்களுக்கும்,படக் குழுவினருக்கும் இருக்கிறது.எனவேதான் ,இது போன்ற பேட்டிகளையும்,வம்பு தும்பு களையும் வளர்த்து விடுகின்றனர்.

இதை எல்லாம் அறியாத ரசிகப் பெருமக்களோ, தன் தலைவனுக்காக அடித்துக் கொண்டு,தன் அழகான வாழ்கையை சீரழித்துக் கொள்கிறார்கள் !

இனிமேலாவது படம் வெளிவருவதற்கு முன் நடிக நடிகையரின் பேட்டிகளையும்,வெளிவந்தபின் அவர்களின் நிலைபாட்டில் ஏற்படும் மாறுபாடுகளையும் கவனியுங்கள்.

எழுதியவர் : கோவை ஆனந்த் (23-Jul-13, 12:19 pm)
பார்வை : 98

மேலே